ஆந்திர ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநில அரசுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திர ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாவலர், உதவியாளர், செவிலியர்,தூய்மை பணியாளர் என ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் யாருமே வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவில்லை. குறிப்பாக உதவியாளர், செவிலியர்,தூய்மை பணியாளர் மூவரும் ஆளுநர் மாளிகையை விட்டே வெளியே வரவில்லை. ஆனால் பாதுகாவலர் மட்டுமே சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்று வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.