ஐ.டி. துறையில் 7,500 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் புதிய திட்டத்தை ஆந்திராவில் செயல்படுத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஐ.டி. துறையில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் புதிய திட்டம் ஒன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ் நாடாருக்கும் ஒப்பந்தமாகி உள்ளது. இதனால் ஐடி துறையில் 7,500 பேருக்கு புதியதாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். அதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். மேலும் அமராவதி பகுதியில் கன்னவரம் தளத்தில் அமைக்கப்பட உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது சிவ் நாடார் அமைக்க உள்ள புதிய தொழில்நுட்ப நிறுவனம் குறித்த காணொளி காட்சிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.