இந்தியா

கிருஷ்ணா நதி குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் !

கிருஷ்ணா நதி குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் !

rajakannan

கிருஷ்ணா நதியின் குறுக்கே ரூ1387 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியுள்ளார். 

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் கடந்த 2014இல் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆந்திராவிற்கு புதிய தலைநகரை அமராவதியில் உருவாக்க சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு முடிவு செய்தது. அதனையடுத்து, அமராவதி நகரை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க பல்வேறு முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். 

அதன் ஒருபகுதியாக, அமராவதி அருகில் உள்ள கிருஷ்ணாநதியின் குறுக்கே பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. ரூ1387 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

3.2 கிலோ மீட்டர் அளவில் கட்டப்படவுள்ள இந்த மேம்பாலத்திற்காக 170 மீட்டர் உயரத்திற்கு தூண்கள் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலமானது அமராவதி நகரை விஜயவாடா-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும். 6 பாதைகள் கொண்ட இந்த மேம்பாலத்தில் 2.5 மீட்டர் அகலத்தில் இருபுறம் நடக்க பாதை இருக்கும். இந்தப் பாலம் நேரடியாக ஐதராபாத்துடன் அமராவதியை இணைக்கிறது.