பாலாறு
பாலாறு pt web
இந்தியா

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுக்கும் ஆந்திர அரசு; தமிழக அரசு எதிர்ப்பு

Angeshwar G

தமிழ்நாட்டிற்குள் ஆந்திரா வழியாக நுழையும் பாலாறு, கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிமீட்டரும், ஆந்திரத்தில் 33 கிமீட்டரும் பாயும் பாலாறு, தமிழகத்தில் தான் அதிகமான தொலைவை கடக்கிறது. தமிழகத்தில் மட்டும் 222 கிமீ தொலைவினை கடக்கிறது பாலாறு. இத்தகைய சூழலில், பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில், 23 ஆவது தடுப்பணை கட்டுவதற்கு ரூ.215 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அடிக்கல்லையும் நாட்டியுள்ளது ஆந்திர அரசு.

23 ஆவது தடுப்பணை கட்டுவதற்குள் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் என தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய அணை கட்டுவதற்கு, அடிக்கல் நாட்டியுள்ள நிலையில் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், 1892 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், நதி நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தை மேற்கொள்ள முடியாது. இது குறித்த தெளிவான வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பாலாறு தடுப்பணை தொடர்பான 2 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலாறு குறுக்கே புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கப்பட்டிருப்பதும், உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

பாலாற்றில் அணை கட்ட முயல்வது கூட்டாட்சிக்கு எதிரானது: துரைமுருகன்

இந்த செயல், இருமாநில நட்பிற்கும் ஏற்றதல்ல. கூட்டாட்சிக்கும் எதிரானது. பாலாறு குறுக்கே புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயல். இதுபோன்ற செயல்களை இனி மேற்கொள்ளக்கூடாது” என தெரிவித்துள்ளார்.