ஆந்திராவில் காதலித்து ஏமாற்ற முயன்ற இளைஞரை, பெண் ஒருவர் செருப்பால் அடித்து உதைத்து திருமணம் செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சந்திரசேகர் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவரும் 3 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஐதராபத்தில் ஒன்றாக வசித்துக்கொண்டே பணிபுரிந்தனர். இந்நிலையில் பெற்றோர் விருப்பத்தின்படி சந்திரசேகர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த திவ்யா, உறவினர்களுடன் சேர்ந்து சந்திரசேகரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கினார். காதலித்த சந்திரசேகரை செருப்பால் அடித்து உதைத்த திவ்யா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி எச்சரித்தார். திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவிக்கும்படி செருப்பால் தாக்கினார். இதைத்தொடர்ந்து காதலன் சந்திரசேகரை கோயிலுக்கு அழைத்துச் சென்று அப்பெண் திருமணம் செய்துகொண்டார்.