ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, பிரதமர் வீடு முன்பு தரையில் அமர்ந்து பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் அன்புமணி ராமதாஸ் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்து பிரதமர் வீடு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அன்புமணி ராமதாஸை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமரை சந்திக்க தாம் நேரம் கேட்டிருந்ததாகவும் அவரை பிரதமர் சந்திக்க மறுத்து விட்டதாகவும், அதனால் அவர் வீட்டு முன் அமர்ந்து போராட்டம் நடத்தியதாகவும் அன்புமணி தெரிவித்தார்.