நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் ஸ்டைலான பிரபலங்களின் பட்டியலில் இந்தியாவின் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்டுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், சல்மான்கான், ரஜினிகாந்த், அட்லீ உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்தனர்.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான ஸ்டைலான பிரபலங்களின் பட்டியலிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளனர்.
கடந்த 12 மாதங்களில் பொதுவெளியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை வைத்து மட்டுமே இப்பட்டியல் வெளியிடப்பட்டதாகவும், இதில் குறிப்பிடப்படும்படியான தகுதிபிரிவுகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் நிக்கோலா கோலன், டிக்டாக் பிரபலம்ஜூல்ஸ் லெப்ரான், தென் கொரியா ஷார்ப்ஷுட்டர் கிம் யெஜி, பாட்காஸ்ட் ஆளுமை அலெக்ஸ் கூப்பர் உள்ளிட்ட 63 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.