இந்தியா

ம.பி.ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் நியமனம்

ம.பி.ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் நியமனம்

webteam

மத்திய பிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது. 76 வயதான ஆனந்திபென் பட்டேல், மோடி பிரதமரான பின் குஜராத் மாநில முதல்வராக 2 ஆண்டுகள் பதவி வகித்தார். 

குஜராத் ஆளுநராக உள்ள ஓ.பி.கோலி, மத்திய பிரதேச மாநிலத்தின் பொறு‌ப்பு ஆளுநராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதவியில் இருந்தார். இந்நிலையில் முழுநேர ஆளுநராக ஆனந்திபென் நியமிக்கப்பட்டுள்ளார்