இந்தியா

“என்னா பேச்சு பேசுனீங்க..” ஆஸ். முன்னாள் கேப்டன்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

“என்னா பேச்சு பேசுனீங்க..” ஆஸ். முன்னாள் கேப்டன்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதும் “இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0 - 4 என்ற கணக்கில் இழக்கும்” என சொல்லி கொக்கரித்தனர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், கிளார்க் மற்றும் மார்க் வாஹ். இந்திய அணி நிச்சயம் ஒயிட்வாஷ் ஆகும், விராட் கோலியும் இல்லாத நிலையில் இந்திய அணி மீண்டெழ வாய்ப்பேயில்லை என சொல்லி கொக்கரித்தனர்.

இந்நிலையில் இந்திய அணி எஞ்சியிருந்த மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி மற்றும் ஒரு போட்டியை டிரா செய்தது. இதன் மூலம் 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரையும் வென்றுள்ளது. இதனையடுத்து, இந்திய அணி படுதோல்வி அடையும் என கூறிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் மற்றும் வீரர்களை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். மீம்ஸ்களை போட்டு அவர்களை கலாய்த்து தள்ளுகின்றனர்.

இதையடுத்து தொழிலதிபரும், மஹிந்திரா குழும தலைவருமான ஆனந்த் மஹிந்திரா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்களின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். “உங்கள் வார்த்தைகளை எப்படி சாப்பிட விரும்புகிறீர்கள்? கிரில்ட்டாகவா, வறுத்தா அல்லது சுட்டா. வேண்டுமெனால் அதை சப்பாத்தி அல்லது தோசையில் மடித்து கொடுக்கட்டுமா?” என ட்விட்டரில் ட்வீட் போட்டுள்ளார். 

கணக்கு பாடத்தில் மிகவும் பிரபலமான LHS = RHS ஈகுவேஷனை LHS (not) = RHS மீமாக மாற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்களின் கருத்துகளை கோப்பையோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள இந்திய அணியுடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின்.