இரவில் 2 புலிகள் நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அவ்வப்போது வைரலான வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர். சமீபத்தில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் இரவு நேரத்தில் 2 புலிகள் நெடுஞ்சாலையில் நடந்து செல்கின்றன. இக்காட்சி மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வர் சாலையில் கடந்த 19-ம் தேதி அன்று எடுக்கப்பட்டதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. "எங்கள் XUV கார்கள் மட்டும் நெடுஞ்சாலையில் பெரும் பூனை அல்ல. அற்புதம்” என ஆனந்த் மஹிந்திரா அந்த விடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.