இந்தியா

வேலை கொடுக்க தயார் -வாகனம் இயக்கும் மாற்றுத்திறனாளியின் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

EllusamyKarthik

மஹிந்திரா குழும தலைவரான ஆனந்த் மஹிந்திரா கை மற்றும் கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் வாகனம் இயக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அந்த ட்வீட்டில் மாற்றுத்திறனாளிக்கு வேலை கொடுக்கவும் தயார் எனத் தெரிவித்துள்ளார். 

Received this on my timeline today. Don’t know how old it is or where it’s from, but I’m awestruck by this gentleman who’s not just faced his disabilities but is GRATEFUL for what he has. Ram, can @Mahindralog_MLL make him a Business Associate for last mile delivery? pic.twitter.com/w3d63wEtvk

— anand mahindra (@anandmahindra) December 27, 2021

“எனது டைம்லைனில் இந்த வீடியோ வந்திருந்தது. இந்த வாகனம் எங்கிருந்து வந்தது, எத்தனை ஆண்டுகளாகிறது என்பது எதுவுமே எனக்குத் தெரியாது. இந்த மனிதரை பார்த்து நான் வியப்படைக்கிறேன். குறையை நிறையாக்கியவர். மஹிந்திரா லாஜிஸ்டிக்கில் பிஸினஸ் அசோஸியேட்டாக பணி கொடுக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

அந்த வீடியோவில் கை மற்றும் கால்கள் இல்லாத அந்த மாற்றுத்திறனாளி தனது வாகனத்தை எப்படி இயக்குகிறார் என்பதை விவரித்திருக்கிறார்.