இந்தியா

ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த படம்: போட்டோஷாப் வேலைப்பாடு என சொன்ன நெட்டிசன்கள்!

EllusamyKarthik

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர். அவரது ட்விட்டர் பக்கத்தில் வேடிக்கையான பதிவுகளை பகிரவும். அது பொழுதுபோக்காகவும், சமயங்களில் தகவல்களை பகிர்வதாகவும் கூட இருக்கும். சில நேரங்களில் தனித்துவமிக்க கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர்கள் மற்றும் இளம் திறமைசாலிகளை பாராட்டியும் ட்வீட் செய்வார். 

அந்த வகையில் நேற்று ஒரு ட்வீட் செய்திருந்தார் அவர். ‘பெரிதாக கனவு காண வேண்டும்’ என கேப்ஷன் கொடுத்து #MondayMotivation என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில் சாலையோர தள்ளுவண்டி கடை ஒன்றின் படத்தையும் பகிர்ந்திருந்தார். அதில் கடையின் பெயர் ‘ஓப்ராய் ஹோட்டல்’ என இருந்தது. 

இந்த நிலையில் அந்த பதிவில் அவர் பகிர்ந்த போட்டோ அசலானது இல்லை என சொல்லியுள்ளனர் நெட்டிசன்கள். மேலும் அது போட்டோஷாப் வேலைப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர்கள் சொல்லியிருந்தனர். குறிப்பாக அந்த ஃபாண்ட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் மற்றும் அசலுக்கு, போட்டோஷாப்புக்கும் உள்ள வேறுபாடு குறித்தும் நெட்டிசன்கள் விளக்கியுள்ளனர்.

அந்த தள்ளுவண்டி கடையின் அசல் பெயர் பைருநாத் தேநீர் கடை என தெரிவித்துள்ளனர். அந்த கடை உதய்பூரில் அமைந்துள்ளதாகவும். அந்த கடையின் படம் 2015-இல் எடுக்கப்பட்டதாகவும் சொல்லியுள்ளனர்.