மத்திய அமைச்சர் அமித்ஷா
மத்திய அமைச்சர் அமித்ஷா முகநூல்
இந்தியா

“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் CAA செயல்படுத்தப்படும்” - அமித்ஷா

PT WEB

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டு மக்களுக்கானது. ஒருவருக்கு குடியுரிமை வழங்குவது என்பதோடு மட்டுமில்லாமல் வேறு ஒருவர் குடியுரிமையை மற்றவர்கள் பறிப்பதை தடுக்கவும் சிஏஏ சட்டம் வழிவகை செய்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த நபர்களுக்கு குடியுரிமை வழங்குவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது.

ஆனால் தேர்தல் ஆதாயங்களுக்காக இஸ்லாமியர்களை இந்த சட்டத்திற்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். ஆகவே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்” என்று மத்திய உள்துறை அமித்ஷா திட்டவட்டமாக கூறினார்.