இந்தியா

தண்ணீரை சேமிக்க பிரதமர் மோடியின் 3 வேண்டுகோள்

rajakannan

தண்ணீரை சேமிப்பதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்ற பின் மான் கி பாத் முதல் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது, நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் குறித்து கவலை தெரிவித்தார். மேலும், “ஒவ்வொரு வருடமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. ஆனால், ஆச்சர்யம் என்னவென்றால் ஒட்டுமொத்த மழை நீரில் நாம் 8 சதவீதத்தை மட்டுமே சேமிக்கிறோம்” என்று கூறினார்.

அத்துடன் தண்ணீரை சேமிப்பது குறித்த மூன்று வேண்டுகோள்களையும் பிரதமர் மோடி முன் வைத்துள்ளார்.

மோடியின் 3 வேண்டுகோள்:-

மேல்தட்டு உட்பட வாழ்வின் அனைத்து தரப்பைச் சேர்ந்த இந்திய மக்களையும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 

தண்ணீரை சேமிப்பது குறித்த பாரம்பரிய முறைகளை எல்லோருக்கும் பகிர வேண்டும்

தண்ணீர் பற்றி நன்கு தெரிந்த நபர்கள் அல்லது தன்னார்வ அமைப்புகள் குறித்த தகவல்களை பகிருங்கள்