இந்தியா

மோடியின் குற்றச்சாட்டுக்கு அமேதி சஞ்சய் காந்தி மருத்துவமனை மறுப்பு

Rasus

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு அமேதி சஞ்சய் காந்தி மருத்துவமனை இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் திட்டத்தில் மருத்துவம் பார்க்க மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவித்ததால், அமேதி சஞ்சய் காந்தி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். ‘‘இது மோடி மருத்துவமனை அல்ல.. அங்குதான் ஆயுஷ்மான் திட்ட கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்” என நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டிற்கு அமேதி சஞ்சய் காந்தி மருத்துவனை இயக்குநர் மறுப்பு தெரிவித்தள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள எஸ் சௌத்ரி, “ பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரற்றமற்றது. இதுவரை இங்கு 200 நோயாளிகள் ஆயுஷ்மான் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். எந்தவொரு மருத்துவமனையும் அரசியல், மதம், சாதி சார்ந்த பாகுபாடுடன் நோயாளிகளை அணுகுவதில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்திலும் ஆயுஷ்மான் திட்ட பலன்கள் ஏழை மக்களை சென்றடைவதில்லை என குற்றச்சாட்டிருந்தார். எனவே தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.