pm modi, mary milben
pm modi, mary milben pt web
இந்தியா

”என் இதயம் வருந்துகிறது”-பிரதமர்முன் தேசியகீதம் பாடிய அமெரிக்க பாடகி மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம்

Angeshwar G

மணிப்பூரில் இரு பெண்கள் ஆடைகள் களையப்பட்டு இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள் இதற்காக கடுமையாக கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க பாடகி மேரி மில்பென் மணிப்பூர் பெண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

manipur

அமெரிக்க பாடகியும் நடிகையுமாக உலகம் முழுவதும் அறியப்படுபவர் 38 வயதான மேரி மில்பென். இவர் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது வாஷிங்டன் டிசியில் ரொனால்ட் ரீகன் கட்டடத்தில் பிரதமருக்கு முன்பு இந்தியாவின் தேசிய கீதத்தை பாடி புகழ்பெற்றவர்.

இந்நிலையில் அமெரிக்க பாடகி மேரி மில்பென்னும் மணிப்பூர் பெண்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

pm modi

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மணிப்பூரில் தாக்கப்பட்ட பெண்களுக்காக என் இதயம் வருந்துகிறது. இந்த மனிதாபிமானமற்ற நடத்தையை பேசியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. அப்பெண்கள் இந்தியாவின் மகள்கள் மட்டுமல்ல, கடவுளின் குழந்தைகள். மனித கண்ணியம் நம் அனைவருக்கும் முக்கியம். இந்த பெண்களுக்காகவும், விரைவான நீதிக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.