இந்தியா

ஊரடங்கால் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் பயன்பாடு அதிகரிப்பு !

jagadeesh

ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளதால் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஓ.டி.டி. பிளாட்பார்ம்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

OVER THE TOP என்பதன் சுருக்கமே OTT PLATFORM. இணையம் மூலம் இயங்கும் இவற்றில் பல மொழி திரைப்படங்கள், வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், பல நாட்டு தொலைக்காட்சி தொடர்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணலாம். நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜீ பிளஸ், ஜீ5, எம்.எக்ஸ். பிளேயர் போன்ற OTT PLATFORM-களுக்கு என்றே தயாரிக்கப்படும் வெப் சீரிஸ்கள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தனித்துவமான வெப் சீரிஸ்களுக்காக பெரும் தொகையை OTT PLATFORM-கள் செலவழிக்கின்றன. தணிக்கை கிடையாது என்பதால் எத்தகைய உள்ளடக்கத்தையும் OTT PLATFORM-ல் காட்சிப்படுத்தலாம். மாற்று சினிமாவை விரும்புவோரின் தேர்வாக OTT PLATFORM-கள் உள்ளன. ஸ்மார்ட் டி.வி. மட்டுமின்றி செல்போன் செயலி மூலமே இவற்றை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் வசதி. இணையத்தின் வேகம் கூடக்கூட இந்தியாவில் OTT PLATFORM-ஐ பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், திரையரங்குகள் உள்பட மக்கள் பொழுதுபோக்குவதற்கான இடங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடைக்கும் மக்கள் OTT PLATFORM-களை அதிகம் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மார்ச் ஒன்றாம் தேதி முதல், மக்கள் அதிகம் பயன்படுத்தும் OTT PLATFORM-களாக NETFLIX மற்றும் HOTSTAR இருப்பதாக GOOGLE TRENDS கூறுகிறது. NETFLIX பயன்பாட்டாளர்கள் நாளொன்றுக்கு 8 நிமிடங்களையாவது அதில் செலவழிக்கின்றனராம்.

அதே போல ஊரடங்கு காலத்தில் AMAZON PRIME-ஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 83 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.