இந்தியா

இந்தியாவில் நடப்பு ஆண்டு 8,000 நேரடி பணியாளர்களை பணியமர்த்த அமேசான் திட்டம்

Veeramani

அமேசான் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு 35 நகரங்களில் 8,000 க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது, இதற்காக செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வேலைவாய்ப்பு முகாம்களை அமேசான் நடத்தவுள்ளது.

 இது தொடர்பாக பேசிய அமேசான் மனிதவளத் தலைவர் மேனா தீப்தி வர்மா, "அமேசான் தனது கார்ப்பரேட், தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாட்டு தளங்களில் இந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளது. மேலும் மெஷின் அப்ளிகேஷன் சயின்ஸ், மனிதவள மேம்பாடு, நிதி, சட்டத்துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிறோம். 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு திருவிழாவாகவும், இந்தியாவின் திறனுக்கு அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வாகவும் இது இருக்கும்" என்று கூறினார்.

மேலும், 2025க்குள் எங்கள் நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 10 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளோம். கொரோனா தொற்றுநோய் நெருக்கடிகளின் போது கூட, அமேசான் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சம் பேருக்கு வேலை வழங்கியதுஎன்று அமேசான் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.