இந்தியா

இன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் யாத்திரை

இன்றுடன் நிறைவடைகிறது அமர்நாத் யாத்திரை

webteam

அமர்நாத் புனித யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது. இந்த யாத்திரையில் இதுவரை 2.60 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோறும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தற்போது வரை சுமார் 2.60 லட்சம் யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.