இந்தியா

பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்!

பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்!

webteam

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களின் மீது தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தான் என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாதிகள் இருப்பதாக காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி.முனீர் கான் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் தீவிரவாதியான இஸ்மாயில் என்பவர் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.