இந்தியா

அதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை - ஒய்.எஸ்.ஆர் அமைச்சர் 

rajakannan

அதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர் போஸ்டோ கூறியுள்ளார்.

அமரவாதியை தலைநகராக தேர்வு செய்தது குறித்து ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. அமராவதி தலைநகருக்கு ஏற்ற இடமல்ல என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் போஸ்டா சத்யநாராயணா சமீபத்தில் கூறியிருந்தார். அதற்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆந்திர மாநிலத்திற்கு நான்கு தலைநகரை அமைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.எஸ்.சவுத்ரி, அமராவதியில் தான் தலைநகர் அமைய வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக அமராவதி தலைநகராக அறிவிக்கப்படவில்லை என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர் போஸ்டோ கூறியுள்ளார். அதாவது, அரசிதழிலில் இன்னும் அமராவதி தலைநகராக வெளியிடப்படவில்லை என்று தெலுங்கு தேசம் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார். முகவரி இல்லாத, முனிஷிபல் நிர்வாகம் இல்லாத ஒரு இடமாக அமராவதி இருந்து வருவதாக போஸ்டோ கூறியுள்ளார். சீரியஸ் இல்லாத நாயுடு என சந்திரபாபு நாயுடுவை அவர் விமர்சித்துள்ளார்.