இந்தியா

மாதச் சம்பளதாரர்களுக்கு ஆண்டுக்கு வெறும் 5,800 சலுகை

webteam

போக்குவரத்துப் படி மற்றும் மருத்துவச் செலவுக்கான நிலையான கழிவாக 40 ஆயிரம் ரூபாயை மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

மாதச் சம்பளதாரர்களுக்கு நிலையான கழிவை அனுமதிக்கும் நடைமுறை 2006-07 ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த நிதியாண்டில் அதை மீண்டும் அனுமதிப்பதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பளத்தில் போக்குவரத்துப் படி மற்றும் மருத்துவச் செலவாக மொத்தம் 40 ஆயிரம் ரூபாய், நிலையான கழிவாக அனுமதிக்கப்படும். எனினும், மாதச் சம்பளக்காரர்களுக்கு இது மிகவும் சொற்பமான சலுகையாகவே கருதப்படுகிறது. ஏனெனில், மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாயும், போக்குவரத்துப் படியாக மாதம் 1,600 ரூபாய் என்ற கணக்கில் 19,200 ரூபாயும் சேர்த்து மாதம் 34,200 ஏற்கனவே கழித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இப்போதைய 40 ஆயிரத்துடன் ஒப்பிட்டால், வெறும் 5,800 ரூபாய் மட்டுமே கூடுதல் பயன் கிடைக்கும். எனினும், இந்தச் சலுகையால் அரசின் வரி வருவாயில் 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.