அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முகநூல்
இந்தியா

சர்ச்சை கருத்தை பேசிய நீதிபதி... பணிநீக்கம் செய்ய மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தீவிரம்!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி மாநிலங்களவையில் நோட்டீஸ் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

PT WEB

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி மாநிலங்களவையில் நோட்டீஸ் சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த விழாவில், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை நீதிபதி சேகர்குமார் யாதவ் கூறி இருந்தது பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், நீதிபதி சேகர்குமார் யாதவை பணிநீக்கம் செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக முறையிட முடிவு செய்துள்ள எதிர்க்கட்சிகள், எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற்று நோட்டீஸ் அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதுவரை, 38 எம்.பி.க்களிடம் இருந்து கையெழுத்து பெறப்பட்டுள்ள நிலையில், இன்றைக்குள் 50 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுவிடும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.