இந்தியா

கொரோனா எதிரொலி : மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து

கொரோனா எதிரொலி : மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து

webteam

நாடு முழுவதும் மார்ச் 31ஆம் தேதி வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் கூடுவதை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மக்கள் வெளியே வர வேண்டாம் என மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதமர் மோடியின் அறிவிப்பை ஏற்று இந்தியா முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மார்ச் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதேசமயம் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு ரயில்கள் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் தேவையற்ற வேலைகளுக்காக வங்கிகளுக்கு வர வேண்டாம் என இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்திருக்கிறது.