இந்தியா

ஜூன் 16 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் ! மத்திய அரசு அழைப்பு

webteam

மத்திய அரசு வரும் 16ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. 

மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக கடந்த மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இதனையடுத்து மத்திய அரசு வரும் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் என முடிவு எடுத்தது. அத்துடன் புதிய மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி விரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 17ஆம் தேதி தொடங்கும் மக்களவை கூட்டத்தில் எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, சபாநாயகருக்கான தேர்தலை நடத்துவார். 

இந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்க மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அதன்படி வரும் 16ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மத்திய அரசின் சட்ட மசோதாவிற்கு ஆதரவும் கேட்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.