இந்தியா

புல்வாமா தாக்குதல்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

webteam

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்‌ தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையி னர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங் களில் மக்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவு தெரிவித் துள்ளன.

இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக, இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்படும் எனத் தெரிகிறது. அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவது என பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.