தமிழகத்தின் உயரிய கலாசாரத்தை நினைத்து பெருமையடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழர்களின் கலாசார உணர்வுகளை காக்க மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இரவு, பகல் பாராமல், கொட்டும் பனியிலும், மழையிலும் இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தங்களது போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். வாடிவாசல் திறந்தால் தான் வீட்டு வாசலை மிதிப்போம் என்று முழக்கமிட்டு தங்களது போராட்டதை நாளுக்கு நாள் அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தமிழர் பண்பாட்டை காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உயரிய கலாசாரத்தை நினைத்து பெருமையடையவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழர்களின் கலாசார உணர்வுகளை காக்க மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.