இந்தியா

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரசிகர்கள் நன்கொடை வழங்குமாறு வீடியோ வெளியிட்ட அக்‌ஷய்குமார்

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரசிகர்கள் நன்கொடை வழங்குமாறு வீடியோ வெளியிட்ட அக்‌ஷய்குமார்

Veeramani

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரசிகர்கள் அனைவரும் நன்கொடை வழங்கவேண்டும் என்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நன்கொடை வழங்குமாறு ரசிகர்களை வலியுறுத்தும் வீடியோவை, அக்‌ஷய் குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதற்கான பங்களிப்புகளை செய்ய மக்களை ஊக்குவிப்பதற்காக  ராமாயணத்திலிருந்து ஒரு கதையையும் கூறினார்.

ராமர் இலங்கையை அடைவதற்கான ராமர் சேது பால கட்டுமானத்தில் ஒரு சிறிய பங்களிப்பை செய்ய விரும்பிய ஒரு அணிலின் கதையை தனது மகள் நிதாராவிடம் சொன்னதாக அக்‌ஷய்குமார் கூறினார்.

அந்த அணில் கதையை முன்னுதாரணமாக கொண்டு அனைவரும் உதவிசெய்ய முன்வர வேண்டும் என்றும் அக்‌ஷய் கூறினார்.

"ராமருக்காக அயோத்தியில் ஒரு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது இப்போது நமது முறை. இந்த வரலாற்று காரணத்திற்காக நம்முடைய திறனுக்கேற்ப பங்களிப்புகளைச் செய்ய வேண்டும். நான் தொடங்குகிறேன். நீங்களும் என்னுடன் சேருவீர்கள் என்று நான் நம்புகிறேன். இதனால் வரும் தலைமுறையினர் ராமர் கற்பித்த வாழ்க்கைப் பாடங்களைப் பின்பற்ற தூண்டப்படுவார்கள் " என அந்த வீடியோவில் அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.