இந்தியா

“அசாமின் உண்மையான நண்பன்”-வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 1 கோடி வழங்கிய அக்‌ஷய் குமார்

“அசாமின் உண்மையான நண்பன்”-வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 1 கோடி வழங்கிய அக்‌ஷய் குமார்

JustinDurai
அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.
 
அசாம் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். சுமார் 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டார்கள். 80 போ் பலியாகியுள்ளனர்.
 
இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
 
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘’அசாமின் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு, அக்‌ஷய் குமார் தனது பங்களிப்பாக, ரூ. 1 கோடி வழங்கியதன் மூலம் அசாமின் உண்மையான நண்பனாக உள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.