இந்தியா

சமாஜ்வாதி வென்றால் அகிலேஷ்தான் முதல்வர்... முலாயம்சிங் யாதவ்

சமாஜ்வாதி வென்றால் அகிலேஷ்தான் முதல்வர்... முலாயம்சிங் யாதவ்

webteam

சமாஜ்வாதிக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அகிலேஷ் யாதவே முதலமை‌ச்சராகப் பொறுப்பேற்பார் என முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். கட்சியில் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஒரு சில நாள்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைத் தொடங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளுங்கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவிற்கும் அவரது மகனும் மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சி பிளவுபடக்கூடும் என்றும் கட்சியின் சின்னம் முடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இருவர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் முலாயம் சிங் தற்போது இவ்வாறு பேசியுள்ளதாகவும் தெரிகிறது.