இந்தியா

காவிரி ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் 

காவிரி ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் 

webteam

மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஏ.கே.சின்ஹா, காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத் தலைவராகவும் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராகவும் மசூத் அசார் பதவி வகித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த வாரம் மத்திய நீர்வள ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் செய்யப்பட்டார். 

ஆனால் மசூத் அசார் பதவி வகித்து வந்த காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராக யாரையும் மத்திய அரசு நியமிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஏ.கே. சின்ஹாவே காவிரி மேலாண்மை ஆணையத்தையும் சேர்த்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய நீர்வள ஆணையத்திற்கும் காவிரி ஆணையத்துக்கும் வேறு வேறு தலைவரை நியமிக்க வேண்டும் என தமிழகம் கோரியிருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசின் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கரித்துள்ளது.