தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவி மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்ததும் நாட்டின் 5ஆவது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக, அஜித் தோவலை நியமித்தது. உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்த இவர், ஐபிஎஸ் பணிக்கு தேர்வானார். பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஆகிய பதவிகளை வகித்த அவர் உளவு துறையிலும் பணியாற்றியுள்ளார்.
உரி தாக்குதலுக்கும் புல்வாமா தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுக்குள் நுழைந்து விமானப் படை நடத்திய தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டவர். இந்திய -சீன எல்லையில் உள்ள தோக்லாம் பிரச்னை தீரவும் இவர் முக்கிய பங்காற்றியவர்.
இந்நிலையில், இவரது பதவியை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை இணை அமைச்சருக்கு சமமான அதிகாரம் வழங்கப் பட்டிருந்தது.