இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இன்று ஆஜராகிறார் ப.சிதம்பரம்

Rasus

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆஜராகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் செல்போன் நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடர்பாக ஏற்கனவே ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரத்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில் ஜூன் 5-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்தது. இந்த சூழலில் ப.சிதம்பரம் ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக இன்று ஆஜராக உள்ளார்.