இந்தியா

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு...8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

webteam

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது தன் அதிகார பலத்தை பயன்படுத்தி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல்லின் பங்குகளை விற்க முயன்றதாக தயாநிதி மாறன் உள்ளிட்டோர் நிர்பந்தித்ததாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐயிடம் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில் தயாநிதிமாறன் உள்ளிட்டோரின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க அனுமதிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.