ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முதன்மை குற்றவாளி ப.சிதம்பரம்தான் என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிம் பேசிய அவர், மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் பங்குகளை வாங்குவதற்கு ப.சிதம்பரம் சட்டவிரோதமாக உதவி புரிந்ததாக தெரிவித்தார். ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு ப.சிதம்பரம் சட்டவிரோதமாக அனுமதியளித்தார். ஏர்செல் நிறுவன பங்குகளை 100% வாங்குவதற்கு மலேசிய நிறுவனமான மேக்சிஸ்-க்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் அதிகபட்சமாக 74% பங்குகளை வாங்கவே சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் மேக்சிஸ் 100% பங்குகளை வாங்கியிருக்கிறது. இதனை மலேசிய பங்குச் சந்தைகளில் மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் அனுமதித்திருக்கிறார்.
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டில் மாறன் சகோதரர்கள் கூட்டுச் சதிகாரர்கள். ஆனால், முதன்மை குற்றவாளி அல்ல. இதில் முதன்மை குற்றவாளி ப.சிதம்பரம்தான். இதில் முதன்மையாக ஆதாயமடைந்தவர் அவரது மகன் கார்த்தி சிதம்பரம். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் 21 வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக தொடங்கியிருக்கிறார்கள் என பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.