இந்தியா

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இன்று உத்தரவு

webteam

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதத எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு தடை விதிக்கக் கோரி, தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன்மீது ஜனவரி 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்க அதன் உரிமையாளருக்கு அழுத்தம் தரப்பட்டப்பட்டதாகவும், விற்பனையின் பலனாக சன் குழும நிறுவனங்களில் மேக்சிஸ் நிறுவனம் அதிக முதலீடு செய்ததாகவும் வழக்கு நடைபெற்று வருகிறது.