இந்தியா

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் - மத்திய அரசு வரைவறிக்கை

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் - மத்திய அரசு வரைவறிக்கை

webteam

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 ஏப்ரல் 1 முதல் தயாரிக்கக்கூடிய கார்களில் புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு வரைவறிக்கை வெளியிட்டுள்ளது

2021 ஏப்ரல் முதல் கார்களில் ஓட்டுநர் இருக்கை மட்டுமின்றி முன்பக்கதிலுள்ள மற்றொரு சீட்டிலும் ஏர் பேக்கை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசு, இந்திய தரச்சான்று தரத்தில் ஏர்பேக் அமைப்பது காட்டாயம். அனைத்து கார்களிலும் ஓட்டுநருக்கு அருகில் உள்ள சீட்டுக்கும் ஏர் பேக் கட்டாயம் அமைக்க வேண்டும். இது தொடர்பான வரைவு அறிக்கை மீது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது