இந்தியாவில் ஆட்டோவில் பயணிப்பதை விட விமானத்தில் பயணிப்பது மலிவாக இருப்பதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பேசிய அவர், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒப்பிட்டால் ஆட்டோ பயணத்தை விட விமானப்பயணம் மலிவாக உள்ளதாக தெரிவித்தார். இது முட்டாள் தனமான கருத்து என சிலர் கூறக்கூடும் என்றும் ஆனால் உண்மை இதுதான் என்றும் ஜெயந்த் சின்ஹா கூறினார்.
சாதாரண ரப்பர் செருப்பு அணிந்தவர் கூட விமானத்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜெட்லி கூறியதையும் சின்ஹா சுட்டிக்காட்டினார்