இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் நிலையங்களுடன், ஆதார் மற்றும் பாஸ்போர்ட்டை இணைக்க இந்திய விமானத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்குள் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள், விமானத்திற்குள் செல்வதற்கு முன் அவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்படும். இதற்காக தற்போது இந்திய விமானத்துறை புதிய திட்டம் ஒன்றை தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தகவல்கள் இணைக்கப்படும். இவற்றை இணைத்த பிறகு அதற்கான ஒரு அங்கீகார மென்பொருள் செல்போன்களுக்கு வழங்கப்படும். இந்த அங்கீகாரம் பெறுவதன் மூலம் விமானப் பயணிகள் அடையாள அட்டை கொண்டுவர வேண்டிய தேவையில்லை. அத்துடன் விமானத்திற்குள் ஏறுவதற்கு முன் செல்போனில் உள்ள இந்த அங்கீகாரத்தை மட்டும் சோதித்து கொண்டு அவர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.