எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவை சந்திக்க தமிழக சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.
இன்று மாலையில் இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனார். ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழக அரசு புதிதாக மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணனும் டெல்லியில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்துப் பேசுகிறார்.