இந்தியா

டெல்லி எய்ம்ஸ் : 200 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி கேட்டு மிரட்டல்! என்ன செய்ய போகிறது அரசு?

Abinaya

டெல்லி எய்ம்ஸ் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ 200 கோடி மதிப்புக்கு கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த 6 நாள்களுக்கு முன்பு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய தளம் மீது வைரல் தாக்கு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு முயற்சிகள் செய்தும் சர்வரை மீண்டும் பழைய நிலைக்கு இன்னும் கொண்டு வரமுடியவில்லை. பின்பு கடந்து 25ம் தேதி, டெல்லி உளவு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது உலகதிற்கு அச்சுறுத்தலாய் மாறியிருக்கும் ரான்சாம்வேர் வைரஸ் தாக்கியிருக்கும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக. இணைய தளம் ஹேக் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சைபர் கிரைம் அதிகரிகளின் ஆலோசனையின் பேரில் கணினிகளின் இண்டெர்நெட் சேவையும் முடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எய்ம்ஸ் மருத்துமனையில் உள்ள 5000 கணினிகளுக்கு ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது 1500 கம்ப்யூட்டருக்கு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டதாகவும், 50 சர்வர்களில் 20 சர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரபலமான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய தளம் சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், விஜபிகள் உட்பட 5 கோடிக்கு அதிகமான நபர்களின் தரவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கணினிகளில் இண்டர்நெட் வேவையும் முடங்கியுள்ளதால் நோயாளிகளின் தகவல்களை பயன்படுத்த முடியாமல் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமத்தில் ஆளாகியுள்ளனர். இதனால் தற்போது கணினி இல்லாமல் நோட் புக்கில் நோயாளிகளின் தரவுகளை பதிவு செய்துவருகின்றனர்.

ஹேக்கர்கள் கேட்ட 200 கோடி கிரிப்டோ கரன்சிகளாக கேட்டுள்ளனர். ஆனால் அதை இந்திய அரசு தடைவிதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்த விஷயத்தை இந்திய அரசு எப்படி கையாள போகிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஹேக்கர்களுக்கு பணிந்து போகப்போகிறதா, அல்லது மீண்டு வரப்போகிறதா என பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன.

சர்வதேச நாடுகளின் உதவியுடன் தான் இணைய தளத்தை மீட்க முடியும் எனவும் இதற்கு பல கோடி ரூபாய செலவாகும் எனவும் கூறப்படுகிறது.