இந்தியா

காமெடியை நிஜமாக்கிய டாக்டர்கள்: வயிற்று வலி பெண்ணுக்கு சிறுநீரக ஆபரேஷன்!

காமெடியை நிஜமாக்கிய டாக்டர்கள்: வயிற்று வலி பெண்ணுக்கு சிறுநீரக ஆபரேஷன்!

webteam

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வயிற்று வலி என வந்த பெண்ணுக்கு சிறுநீரக கோளாறுக்கான அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பீகார் மாநிலம் சஹர்சாவைச் சேர்ந்தவர் ரேகா தேவி. இவருக்கு வயிற்று வலி பிரச்னை. சொந்த ஊரில் பலரிடம் காண்பித்து வயிற்று வலி பிரச்னை தீரவில்லை. இதையடுத்து டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் மூத்த மருத்துவ பேராசிரியர் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்த னர். ஆனால் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்காமல் டயாலிஸ் சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னரும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை. ரேகா தேவியிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் தவறான சிகிச்சை அளித்த விஷயம் தெரிய வந்தது.இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை டீன் டாக்டர் ஓய்.கே.குப்தா, குழு அமைத்து இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.


ரேகாவின் மருத்துவ அறிக்கை தொடர்பான ஆவணங்கள் மாறியதுதான் தவறான சிகிச்சைக்கு காரணம் என கூறப்படு கிறது. தவறான சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல் அதற்கான ஆவணங்களிலும் முறைகேடுகள் செய்ததாக பாதிப்புக் குள்ளான பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பொதுவாகவே டாக்டர்களையும் மருத்துவமனையையும் கிண்டல் செய்து ஏராளமான காமெடி வரும். அதை நிஜமாக்கி இருக்கிறார்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள்.