குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மேலும், இக்கட்டடத்தில் இருந்தவர்களும் உயிர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பலியான உடல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விபத்து நடைபெற்ற இடத்தின் இடிபாடுகளில் இருந்து ஏராளமான தங்கம், பணம் மற்றும் சில ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 800 கிராமுக்கு அதிகமான தங்க ஆபரணங்கள், 80,000 ரூபாய் ரொக்கம், பாஸ்போர்ட்கள் மற்றும் பகவத் கீதையின் நகல் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முழுத் தகவல்களை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.