பாதுகாப்பு விஷயங்களுக்கான பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், விசாரணை செய்த ஐவர் குழுவில் 3 பேர் சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரக ஜெனரல் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் டிஜிசிஏவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என்பதால் அவர்களை விசாரணைக்குழுவில் நியமித்திருக்கக் கூடாது என்று வாதிட்டார்.
விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் ஆகியோர், முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது எதிர்பார்க்காதது என்றும், பொறுப்பற்ற தன்மை என்றும் கூறினர்.
தவறான தகவல் பரவ இடம் தரமால் ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என்றனர். மத்திய அரசு, டிஜிசிஏ பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர். விமான எரிபொருள் சுவிட்சை ரன் என்று ஆன் செய்வதற்கு பதில் கட் ஆஃப் என்று விமானி தவறுதலாக ஆஃப் செய்து விட்டதால் விபத்து நேரிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.