அகமதாபாத் தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தவரை ஆத்திரம் கொண்ட மகன்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
அகமதாபாத் காந்திநகரில் உள்ள கோகசன் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் தாகூர் மற்றும் ஜெயேஷ் தாகூர் சகோதரர்களான இருவரும் தனது தாயுடன் வசித்து வந்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் சரியில்லாமல் இவர்களின் தந்தையை இறந்த நிலையில், இவரது தாய்க்கு, ரத்தன் தாக்கூர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளனர்.
இவர்களது உறவு, சஞ்சய் தாகூர் மற்றும் ஜெயேஷ் தாகூருக்கு பிடிக்கவில்லை, இதனால் இறந்த தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்று நினைத்தவர்கள், தாயுடன் பழகுவதை தவிற்கும்படி பலமுறை ரத்தன் தாக்கூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஊர் தலைவர்களின் தலைமையில் ரத்தன் தாக்கூருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இருப்பினும் ரத்தன் தாக்கூர் அவரது தாயாருடன் நெறுக்கத்தில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட சகோதரர்கள் சம்பவ தினதன்று, கட்டிடவேலை செய்துக்கொண்டிருந்த ரத்தன் தாக்கூர் இடத்திற்கு சென்று அவரை கத்தியால் குத்தி குடலை உறுவி போட்டுள்ளனர். இதைக்கண்டு அச்சமடைந்த ரத்தன் தாக்கூரின் நண்பர்கள் உடனடியாக போலிசாருக்கு தவகல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் ரத்தன் தாக்கூரின் உடலைக்கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியதுடன், மொபைல் போன் சிக்னலைப்பயன்படுத்தி சகோதரர்களின் இருப்பிடத்தை தெரிந்துக்கொண்டு அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.