இந்தியா

காதல் தோல்வி: பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

காதல் தோல்வி: பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

webteam

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டதால் மனமுடைந்த காதலர் பேஸ்புக் நேரலை செய்து தற்கொலை செய்துகொண்டார்

ஆக்ராவின் ரைபா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான ஷியாம் ஷிகார்வர் இளைஞர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இருந்து நேரலையில் வந்துள்ளார். அவரது நண்பர்களும் அதனை பார்த்துள்ளனர். நேரலையில் பேசிய அவர், நான் தற்கொலை செய்யப்போகிறேன். தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் என்னுடைய குடும்பத்தினரை கைது செய்யக் கூடாது. இறந்த பின் எனது புகைப்படங்களை எனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதனை நேரலையில் பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள் இளைஞர் கோவில் வளாகத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் ஷியாம் எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அதில், '' நான் என் காதலியை பிரிந்து வாடுகிறேன். அவள் இல்லாமல் வாழ முடியாது. அவள் வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறாள் என்ற உண்மையை என்னால் தாங்க முடியவில்லை. அவள் இல்லாததால் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். நான் என் வேலையை இழந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஷ்யாமின் தற்கொலை அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேஸ்புக் பக்கத்தை ஷ்யாமின் குடும்பத்தினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.