முபாரக் மன்சில் எக்ஸ் தளம்
இந்தியா

ஆக்​ரா ​| 17-ஆம் நூற்​றாண்​டில் ஒளரங்கசீப் கட்டிய ‘முபாரக் மன்சில்’ அரண்மனை புல்டோசரால் இடிப்பு!

ஆக்ராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 17ஆம் நூற்றாண்டு முகலாய பாரம்பரிய கட்டடக்கலையான முபாரக் மன்சில் இடிக்கப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கடந்த 17-ஆம் நூற்​றாண்​டில் ‘முபாரக் மன்சில்’ என்ற அரண்மனை ஒளரங்​கசீப் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இது, ’ஔரங்கசீப்பின் ஹவேலி’ என அழைக்கப்படுகிறது. ஆர்க்கிபால்ட் கேம்ப்பெல் கார்லைலின் 1871 அறிக்கையின்படி, ‘சமுகர் போரில் வெற்றிபெற்ற பிறகு ஔரங்கசீப் இதை கட்டியதாக எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் அந்தக் கட்டடக்கலையின் பிரதிபலிப்புகளையும் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த அரண்மனையில், ஷாஜஹான், ஷுஜா மற்றும் ஔரங்கசீப் உள்ளிட்ட முக்கிய முகலாய அரசர்கள் வசித்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியில் இவ்வரண்மனை புதுப்பிக்கப்பட்டு அலுவலகமாக மாற்றப்பட்டு, இறுதியில் 1902இல் ’தாரா நிவாஸ்’ எனப் பெயர்பெற்றது.

இந்த நிலையில், முபாரக் மன்சிலை பாது​காக்​கப்​பட்ட நினை​வுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக ஆட்சேபனைகளை கேட்டு உ.பி. மாநில தொல்​லியல் ஆய்வுத் துறை​ கடந்த செப்​டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளி​யிட்​டது. அதன்​பின்னர், கடந்த 2 வாரங்​களுக்கு முன்னர் மாநில தலைநகர் லக்னோ​வில் இருந்து வந்த அதிகாரி​கள், முபாரக் மன்சிலை பாது​காப்பது தொடர்பாக ஆய்வு செய்​தனர். அவர்கள் வந்து சென்ற பிறகு முபாரக் மன்சிலை இடிக்​கும் பணி தொடங்கி​விட்​டது.

புல்டோசர்கள் மூலம் அந்த அரண்​மனையை இடித்​தனர். நூற்றுக்​கும் மேற்​பட்ட டிராக்​டர்​களில் இடிபாடுகள் கொண்டு செல்​லப்​பட்டன. தற்போது முபாரக் மன்சிலின் பெரும்​பாலான பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உள்ளூர்​வாசிகள், “பில்டர் ஒருவருடன் போலீ​ஸார், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இந்த அரண்மனையை இடித்து​விட்​டனர். பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டு​கின்​றனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி, “முபாரக் மன்சில் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்திய தொல்​லியல் ஆய்வுத் துறை மற்றும் வரு​வாய்த் துறை​யினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், இனிமேல் அந்த இடத்​தில் வேறு ​மாற்​றங்​கள் எது​வும் செய்​யக் கூடாது எனவும் இதுதொடர்பாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்​றார்