Rail based agni Missile Launch ani
இந்தியா

அக்னி பிரைம் ஏவுகணை.. ரயிலில் இருந்து ஏவி இந்தியா சாதனை!

நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

PT WEB

நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. பாதுகாப்பில் இந்தியா எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, SFCயுடன் இணைந்து இச்சோதனையைச் செய்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நகரும் ரயில் தளத்தில் இருந்து ஏவப்படுவதால், எதிரிகளால் ஏவுகணையைக் கண்டறிந்து தாக்குவது கடினமாகிறது. சாலை வசதி இல்லாத இடங்களிலும்கூட தண்டவாளம் அடிப்படையிலான அமைப்பால் ஏவுகணையைக் கொண்டுசெல்ல முடியும்.

சுரங்க ரயில் பாதைகள் ஏவுகணை இருக்கும் இடத்தை, எதிரி உளவு செயற்கைக்கோள்களிடம் இருந்து மறைக்க உதவுகின்றன. போர்க்காலங்களில் எதிரிகள் ராணுவ முகாம்களைக் குறிவைக்கும் சூழலில், ரயில்வே வழித்தடங்களைப் பயன்படுத்தி அக்னி பிரைம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த முடியும் எனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். MIRV தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள அக்னி பிரைம் ஏவுகணை, ஒரேநேரத்தில் வெவ்வேறு இலக்குகளை 4 அணு ஆயுதங்கள் மூலம் தாக்கி அழிக்கும் திறன்கொண்டது. கண்டம்விட்டு கண்டம் பாயும் திறன்கொண்ட இவ்வகை ஏவுகணைகளை ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகள் மட்டுமே வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.