இந்தியா

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் : பாஜகவிற்கு அதிக வாய்ப்பு?

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் : பாஜகவிற்கு அதிக வாய்ப்பு?

webteam

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. 

மத்திய ஆட்சியை தீர்மானிக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. 

ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கணிப்பில் பாஜக கூட்டணி - 287, காங்கிரஸ் கூட்டணி - 128, மற்றவை - 127 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி - 306, காங்கிரஸ் கூட்டணி - 132, மற்றவை - 104 இடங்களை பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நியூஸ் எக்ஸ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி - 242, காங்கிரஸ் கூட்டணி - 164, மற்றவை - 136 இடங்களில் வெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டுடேஸ் சாணக்யா வெளியிட்டுள்ள கணிப்பில் பாஜக கூட்டணி 340, காங்கிரஸ் கூட்டணி 70, மற்றவை 133 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.