இந்தியா

“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே

“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே

webteam

தான் ஒரு வெஜிடேரியன் என்றும் வெங்காயத்தை ஒருபோதும் சாப்பிட்டதேயில்லை என்றும் மத்திய பாஜக அமைச்சர் அஷ்வினி சௌபே கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது.

இந்நிலையில், வெங்காய விலை உயர்வு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே, “நான் ஒரு வெஜிடேரியன். வெங்காயத்தை ஒரு போதும் சுவைத்ததேயில்லை. அப்படியிருக்கையில், என்னைப் போன்ற ஒருவருக்கு எப்படி சந்தையில் இருக்கும் வெங்காயத்தின் விலை நிலவரம் தெரியும்” என்றார்.

முன்னதாக, நேற்று எம்.பி சுப்ரியா சூலே எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் அதிகமாக வெங்காயமோ அல்லது பூண்டோ சாப்பிடுவதில்லை. ஆகவே கவலை வேண்டாம். வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத ஒரு குடும்ப பழக்கத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்”என்று கூறியிருந்தார்.